/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோ ஆப்டெக்ஸில் தீபாவளி 30 சதவீத தள்ளுபடி
/
கோ ஆப்டெக்ஸில் தீபாவளி 30 சதவீத தள்ளுபடி
ADDED : அக் 14, 2025 09:59 PM
தீ பாவளி பண்டிகை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸில் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை களைகட்டியுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை மருதம் விற்பனை நிலையத்தில், பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களிடமுள்ள கிழிந்த நிலையிலுள்ள ஒரிஜினல் ஜரிகைப் பட்டுப் புடவைகளைக் கொடுத்துவிட்டு அதன் விலைக்கு புதிய பட்டுப் புடவைகள் பெற்றுக் கொள்ளலாம்.
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆண்கள் அணியும் ரெடிமேட் லினன், ரிங்க்கிள் ப்ரி சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள், மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மாதாந்திர சேமிப்பு திட்டம் 300- ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால், 12வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். வாடிக்கையாளர் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை, கோஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்துள்ளார்.