தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீபாவளிக்கு 30 தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கம்

தீபாவளிக்கு 30 தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கம்

தீபாவளிக்கு 30 தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கம்


UPDATED : நவ 06, 2026 07:24 PM

ADDED : நவ 06, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:24 PM ADDED : நவ 06, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் இன்று (நவ.,6) முதல், பஸ் ஸ்டாண்ட்கள் நிரம்பி வழிகின்றன.

குறிப்பாக, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்வோர் பண்டிகை சமயங்களில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து, சாலை மறியலில் ஈடுபடுவதையும் அவ்வப்போது காணமுடிகிறது.

‘இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து ஒப்பந்தம் அடிப்படையில் மதுரை, சென்னை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 30 தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் மட்டும் பணியமர்த்தப்பட்டு, அந்தந்த ஊர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்றனர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us