/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் நகை கொள்ளை
ADDED : மே 15, 2025 12:07 AM
கோவை, ;துடியலுாரில் வீட்டின் பூட்டை உடைத்து, 33 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
துடியலுார், சாய் நகரை சேர்ந்தவர் சாய் வசந்த், 34; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி வீடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ளது. கடந்த, 11ம் தேதி சாய் வசந்த் பெரியநாயக்கன்பாளையம் சென்றார்.
அன்று அங்கு தங்கிய சாய் வசந்த், மறுநாள் காலை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 33.5 சவரன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், முன் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், உள்பக்கமாக பூட்டிவிட்டு, கொள்ளையடித்த நகைகளுடன், பின் கதவு வழியாக தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில், பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.