/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"சாக்குத் தொழில் நடத்த வணிக வளாகம் தேவை'
/
"சாக்குத் தொழில் நடத்த வணிக வளாகம் தேவை'
ADDED : ஜூலை 11, 2011 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சாக்குத் தொழில் நடத்த தனி வணிக வளாகம் அமைத்துத் தர கலெக் டரிடம்
சாக்கு வியாபாரி கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.கலெக்டர் கருணாகரனி டம்
அளித்த மனுவில் அச்சங்கத்தினர் கூறியுள் ளதாவது: தற்போது சாக்குத் தொழில்
அழிந்து வருகிறது.
இத்தொழிலுக்கான கடைகளை குடியிருப்பு பகுதிகளில் நடத்த
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, அரசு சார்பில் பிற தொழில்கள்
நடத்த தனி கடைகள் மற்றும் வணிக வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது போல்,
சாக்குத் தொழில் நடத்தவும் தனி வணிக வளாகமும், வட்டியில்லா வங்கிக் கடன்
பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.