/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றங்களை தடுக்க 35 சி.சி.டி.வி., கேமராக்கள்
/
குற்றங்களை தடுக்க 35 சி.சி.டி.வி., கேமராக்கள்
ADDED : செப் 05, 2025 10:08 PM
மேட்டுப்பாளையம்:
காரமடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 35 அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
கோவை மாவட்டம் காரமடை அருகே தேக்கம்பட்டியில் உள்ள ஐ.டி.சி., நிறுவனத்தின் சார்பில் சிஎஸ்ஆர் நிதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் 35 அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள் காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் வெள்ளியங்காடு, தாயனூர், பெட்டதாபுரம், கன்னார்பாளையம் உள்ளிட்ட ஜங்சன்களிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களி லும் பொருத்தப்பட உள்ளன. இப்பகுதிகளில் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், அப்படி நடந்தால் அதற்கு காரணமானவர்களை கண்டறியவும் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவாறே இந்த கேமராக்களை கண்காணிப்பதற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.