/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3.60 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி; கலெக்டர் ஆய்வு
/
3.60 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி; கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 26, 2025 11:10 PM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்காரம்பாளையம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், நாற்றங்கால் பண்ணையில் வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லிக்காய், மாங்கனி உள்ளிட்ட மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை, கோவை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
அதன் பின், அவர் தெரிவித்ததாவது:-
கோவை மாவட்டத்தில் 32 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 3 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மரக்கன்றுகள் ஆறடி உயரம் வரை வளர்க்கப்பட்டு, பின் வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், நீர்நிலையோரங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் வளர்ச்சி சங்கேத் பல்வந்த் வாகே, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ரவீந்திரன் உடனிருந்தனர்.

