/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடெல்லாம் பள்ளம்; பள்ளமெல்லாம் வெள்ளம்: உப்பிலிபாளையம் பி.ஆர். லே - அவுட்டில் அவஸ்தை
/
ரோடெல்லாம் பள்ளம்; பள்ளமெல்லாம் வெள்ளம்: உப்பிலிபாளையம் பி.ஆர். லே - அவுட்டில் அவஸ்தை
ரோடெல்லாம் பள்ளம்; பள்ளமெல்லாம் வெள்ளம்: உப்பிலிபாளையம் பி.ஆர். லே - அவுட்டில் அவஸ்தை
ரோடெல்லாம் பள்ளம்; பள்ளமெல்லாம் வெள்ளம்: உப்பிலிபாளையம் பி.ஆர். லே - அவுட்டில் அவஸ்தை
ADDED : அக் 26, 2025 11:10 PM

சாலையெங்கும் பள்ளம் உப்பிலிபாளையம், பி.ஆர்.லே-அவுட்டில் தார் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்து, மண் ரோடு போல இருக்கிறது. ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. மழை பெய்யும் போது குழிகளில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும், சகதியுமாக இருக்கிறது. புதிய தார் சாலை அமைக்க கவுன்சிலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையில்லை.
- ரெஜினா: ஒருவழிப்பாதையில் விதிமீறல் ரேஸ்கோர்ஸ், மேற்கு கிளப் ஒருவழிப்பாதையில், விதியை மீறி எதிர்புறம் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடக்கிறது. சாலையின் இருபுறமும் தனியார் பேருந்துகள், கார்கள் நிறுத்தப்படுவதால் சாலை குறுகலாகி, விபத்து அதிகரிக்கிறது.
- முருகேசன்: முடிக்கப்படாத சாலைப்பணி மலுமிச்சம்பட்டி, சுப்பையா கவுண்டர் வீதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலைப்பணிகள் துவங்கப்பட்டன. ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை இதுவரை முடிக்கவில்லை. முறையான சாக்கடை வடிகால் வசதியின்றி, திறந்தநிலையில் கழிவுநீர் செல்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
- கோபி: இரவில் தொடரும் அச்சம் சுப்பராயன் முதலியார் வீதி, கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் செல்லவே அஞ்சுகின்றனர்.
- முத்துக்குமார்: சாலையில் 'குளம்' கோவை மாநகராட்சி, ஒன்றாவது வார்டுக்குட்பட்ட எஸ்.பி. நகர், பார்க் அவென்யூ, பி.எம்.பி. வசந்தம், திருமுருகன் நகர் செல்லும் வழியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடவில்லை. சாலையில் உள்ள குழிகளில், தண்ணீர் தேங்கி நிற்கிறது. கார், பைக் போன்ற வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
- சாந்தி: வடிகாலை சீரமைக்கணும் குறிச்சி, 85வது வட்டத்திற்குட்பட்ட வெங்கடாஜலபதி நகர் பகுதியின், முதல் வீதி கடைசி வடக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்குள், சாக்கடை நீர் புகுந்து, மண் ரோடு சகதியாக உள்ளது. நடப்பதற்கு சிரமமாகவும், சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலை, புதிதாக கட்டப்பட்ட வடிகாலுடன் இணைத்தால் பிரச்னை தீரும்.
- ரிதன்யா: மூச்சு முட்டும் துர்நாற்றம் மதுக்கரை மார்க்கெட் ரோடு, தக்காளி மார்க்கெட் எதிர்ப்புறம், பிரியா காம்பளக்ஸ் முன்னால் உள்ள சாக்கடை, எப்போதும் நிரம்பிய நிலையில் உள்ளது. மூச்சு முட்டும் அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. சீரான இடைவெளியில் சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும்.
- கார்மேகம்: கம்பம் இருக்கு விளக்கில்லை நீலிக்கோணாம்பாளையம், 55வது வார்டு, ரேணுகா நகர், இரண்டாவது வீதியில் இதுவரை தெருவிளக்கு வசதி ஏற்படுத்தித்தரவில்லை. பல வருடங்களாக தெருவிளக்கு அமைத்து தர வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- ராபர்ட்: தெருவிளக்கு பழுது ஒண்டிப்புதுார், 57வது வார்டு, எஸ்.எம்.எஸ்., லே- அவுட், இரண்டாவது வீதியில் கடந்த பத்து நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. பழுதான தெருவிளக்கை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- பழனிசாமி: சேதமடைந்த கம்பம் ஆவாரம்பாளையம், மேற்கு ஏழாவது வீதியில் கம்பம் ஒன்று மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் நடுவில் இரண்டாக பிளந்தபடி, பெரிய விரிசல் உள்ளது. சேதமடைந்த கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- வேல்முருகன்:

