/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.வி.எஸ். கல்லுாரியில் 37வது பட்டமளிப்பு விழா
/
ஆர்.வி.எஸ். கல்லுாரியில் 37வது பட்டமளிப்பு விழா
ADDED : செப் 12, 2025 10:30 PM

கோவை; சூ லுார் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லுாரியில், 37வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஐ.இ. எஸ்.ஏ. தலைவர் வீரப்பன், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ''தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த நிலையை அடைய எப்போதும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார். 600 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர். இந்தாண்டின் கல்லுாரி செயல்பாடுகள், மாணவர்களின் சாதனைகளை முதல்வர் சிவக்குமார் எடுத்துரைத்தார். பட்டதாரிகள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரிக்கு மரியாதை செலுத்தினர்
கல்லுாரி செயலர் சாரம்மாள், நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், தாளாளர் வித்யா லட்சுமி, ஆடிட்டர் முரளி, துணை முதல்வர் அய்யப்பதாஸ் மற்றும் இயக்குனர் விவேகானந்தர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.