/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விபத்தில்லா கோவை' உருவாக 3.82 லட்சம் பேர் உறுதிமொழி
/
'விபத்தில்லா கோவை' உருவாக 3.82 லட்சம் பேர் உறுதிமொழி
'விபத்தில்லா கோவை' உருவாக 3.82 லட்சம் பேர் உறுதிமொழி
'விபத்தில்லா கோவை' உருவாக 3.82 லட்சம் பேர் உறுதிமொழி
ADDED : அக் 10, 2025 12:45 AM

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர போலீஸ் மற்றும் உயிர் அமைப்பு சார்பில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க திட்டமிடப்பட்டது.
கோவை அரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பலரும் உறுதிமொழி ஏற்றனர். அதன் தொடர்ச்சியாக, நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு, தனியார், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், தொழிலாளர்கள் என பலரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாலை 6 மணி வரை, 3.82 லட்சம் பேர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 12ம் தேதி வரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. உறுதிமொழி ஏற்று அதை பதிவு செய்யாதவர்கள், அதற்கான க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.