/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூழல் பாதுகாப்பு குறித்து வரும் 3ல் மராத்தான்
/
சூழல் பாதுகாப்பு குறித்து வரும் 3ல் மராத்தான்
ADDED : ஜன 01, 2025 06:25 AM
வால்பாறை : வால்பாறையில், வரும், 3ம் தேதி இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்த மராத்தான் போட்டி நடக்கிறது.
இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வால்பாறை வாகன பழுதுநீக்குவோர் நல சங்கத்தின் சார்பில், 'ஹில்ஸ் மராத்தான்' போட்டி நடக்கிறது.
கடந்த, 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த மராத்தான் போட்டி, பள்ளிகள் தொடர் விடுமுறையால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும், 3ம் தேதி காலை, 8:30 மணிக்கு மராத்தான் போட்டி நடக்கிறது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 10 ஆயிரம்; மூன்றாவது பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இது தவிர, ஏழு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை வாகன பழுதுநீக்குவோர் நல சங்க தலைவர் பிரபு, செயலாளர் குட்டி, பொருளாளர் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

