/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி
/
நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி
நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி
நிலத்தடி தொட்டியில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பலி
ADDED : நவ 04, 2024 08:57 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மூன்று வயது சிறுமி இறந்தது குறித்து, கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, கஞ்சம்பட்டி அம்மேகவுண்டனுாரை சேர்ந்த கட்டட தொழிலாளியான கார்த்திக்,28, சத்யா,25, ஆகியோர் கோவையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நானிகா, 3, என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'தீபாவளி பண்டிகைக்காக, கார்த்திக், சத்தியா குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தனர். பாட்டி செல்வியுடன், மூன்று வயது குழந்தை இருந்தது.உறவினர், குழந்தையுடன் விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது, வீட்டின் பின்பக்கம் உள்ள நாகராஜ் என்பவரின், ஆறு அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்தார். தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்காத நிலையில், தொட்டியில் குழந்தை விழுந்து இறந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.