/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானையால் 400 வாழைகள் சேதம்
/
காட்டு யானையால் 400 வாழைகள் சேதம்
ADDED : மே 15, 2025 11:38 PM

தொண்டாமுத்துார்; கரடிமடையில், வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால், 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.
மாதம்பட்டி அடுத்த கரடிமடையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான, 6 ஏக்கரில், வாழை நடவு செய்திருந்தார். தற்போது, வாழை காய்க்க துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கரடிமடை வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறி, அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது.
இதில், ஜெயக்குமாரின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, தோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியை சேதப்படுத்தியது. தொடர்ந்து, தோட்டத்திற்குள் புகுந்து 400க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. அதன்பின், அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிகள் சென்றது. வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.