/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டத்தில் மாதம் 4,200 பிரசவம் இறப்பு: தடுக்க கண்காணிப்பு தீவிரம்
/
மாவட்டத்தில் மாதம் 4,200 பிரசவம் இறப்பு: தடுக்க கண்காணிப்பு தீவிரம்
மாவட்டத்தில் மாதம் 4,200 பிரசவம் இறப்பு: தடுக்க கண்காணிப்பு தீவிரம்
மாவட்டத்தில் மாதம் 4,200 பிரசவம் இறப்பு: தடுக்க கண்காணிப்பு தீவிரம்
ADDED : நவ 20, 2025 02:50 AM
கோவை: கோவை மாவட்டத்தில், பிரசவ நேர இறப்புகளை தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி தெரிவித்தார்.
மாநில அளவில், பிரசவ நேரத்தில் தாய் மற்றும் குழந்தை இறப்பு (எம்.எம்.ஆர்., - ஐ.எம்.ஆர்.,) ஆய்வு கூட்டம், ஆன்லைன் வழியாக மாநிலம் முழுவதும் நடந்தது. மாவட்டங்களில் பிரசவ நேரங்களில் தாய் இறப்பு காரணங்கள், குழந்தை இறப்பு காரணங்கள் கேட்டு ஆய்வு செய்யப்பட்டன.
கோவையில், கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு 180 நாட்கள் முன்னரும், 180 நாட்கள் பின்னரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இதில், பல கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை பிரச்னைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. உரிய முன்னெச்சரிக்கை இல்லாத கர்ப்பிணிகளே, பெரும்பாலும் பிரசவ நேரத்தில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''கோவையில், 4,200 பிரசவங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. ஹை -ரிஸ்க் கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பிரசவத்திற்கு எங்கு அட்மிட் ஆகப்போகிறார்கள் என்பதை உறுதிசெய்து கண்காணிப்போம்.
செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆரம்ப சுகாதாரநிலையங்களில், பிரசவத்திற்கு 15 நாட்கள் இடைவெளி உள்ள கர்ப்பிணிகளை வரவழைத்து, பரிசோதனை செய்கிறோம்,'' என்றார்.
கர்ப்பிணிகள் கவனம்
சொல்கிறார் டீன்
டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''பிர சவ நேரங்களில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். சரியான நேரங்களில் பரிசோதனை செய்து கொள்வது, டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தவிர்க்காமல் எடுக்க வேண்டியது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு, இணை நோய்கள் போன்ற 'ஹை ரிஸ்க்' பட்டியலில் உள்ள கர்ப்பிணிகள், அதிக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய் வீட்டு அருகில் உள்ள மருத்துவமனை என்று முடிவு செய்யாமல், நம் உடல் நிலை அறிந்து அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையை, முன்கூட்டியே தேர்வு செய்துகொள்ள வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில், ஆக., மாதம் இறப்பு ஏதும் இல்லை, செப்., மாதம் 3, அக்., மாதம் ஒரு பிரசவ நேர இறப்பு பதிவாகியுள்ளது. இறுதிநேரத்தில் பிரச்னைகளுடன் வருவதால், சிக்கல்கள் ஏற்படுகின்றன,'' என்றார்.

