/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 கும்கி யானைகள் வரகலியாறுக்கு மாற்றம்
/
5 கும்கி யானைகள் வரகலியாறுக்கு மாற்றம்
ADDED : மே 05, 2025 10:43 PM

வால்பாறை; மானாம்பள்ளி வனச்சரகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, ஐந்து கும்கி யானைகள் மீண்டும் வரகலியாறு முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
உலாந்தி வனச்சரகத்துக்கு உட்பட்ட வரகலியாற்றில், வனத்துறை சார்பில், 25 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலாந்தி வனச்சரகம் வரகலியாறு யானைகள் முகாமில், பாகன்களின் குடியிருப்பு, சமையல் அறை, யானைகள் முகாம் சீரமைக்கும் பணி நடக்கிறது.
இதனையடுத்து, வரகலியாறில் பராமரிக்கப்பட்டு வந்த, பரணி, உரியன், சின்னதம்பி, சுயம்பு, சூர்யா ஆகிய ஐந்து கும்கி யானைகள், வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கும்கி யானைகள் மீண்டும் வரகலியாறு யானைகள் முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரீதரன் கூறியதாவது: மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானைகளை, தினமும் காலை, மாலை நேரங்களில் பாகன்கள் வனப்பகுதியில் மேய்சலுக்கு கொண்டு சென்றனர். கும்கி யானைகளை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும், மானாம்பள்ளி வனச்சரகத்தின் சார்பில் செய்யப்பட்டன.
தற்போது உலாந்தி வனச்சரகம், வரகலியாறு யானைகள் முகாமில், பராமரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், மானாம்பள்ளி தற்காலிக முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானைகள் மீண்டும் வரகலியாறு முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, கூறினார்.