/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் தொகுதியில் 50 சதவீத படிவங்கள் பதிவு
/
சூலுார் தொகுதியில் 50 சதவீத படிவங்கள் பதிவு
ADDED : நவ 27, 2025 05:22 AM

சூலுார்: சூலுார் சட்டசபை தொகுதியில் இதுவரை, பூர்த்தி செய்யப்பட்ட 50 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. சூலுார் சட்டசபை தொகுதியில், 333 ஓட்டு சாவடிகளில் நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், கூடுதல் மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை பெறப்பட்ட படிவங்கள், தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடக்கும் பணிகளை, சூலுார் தொகுதி நோடல் அதிகாரியான முருகேசன் ஆய்வு செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் அரச குமார், அம்பிகா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் உத்தரவின் படி, வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, திரும்ப பெறும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பெறப்பட்ட படிவங்களில் பூத் எண், பாகம் எண், பெயர், முகவரி சரியாக உள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது.
இதுவரை, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும், டிச., 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். விடுபட்டவர்களை இணைக்க, ஜன., 8 ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. புதிய படிவங்களை பரிசீலித்து, கள ஆய்வு செய்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 7 ம்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

