/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா அளித்த செஸ் பயிற்சியால் வெற்றி பெற்ற மாணவர்கள்
/
ஈஷா அளித்த செஸ் பயிற்சியால் வெற்றி பெற்ற மாணவர்கள்
ஈஷா அளித்த செஸ் பயிற்சியால் வெற்றி பெற்ற மாணவர்கள்
ஈஷா அளித்த செஸ் பயிற்சியால் வெற்றி பெற்ற மாணவர்கள்
ADDED : நவ 27, 2025 05:22 AM

தொண்டாமுத்தூர்: பொள்ளாச்சியில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெற்று அ சத்தியுள்ளனர்.
ஈஷாவை சேர்ந்த சுவாமி தத்யா, ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் உள்ள மாணவர்களுக்கு, செஸ் விளையாட்டில் பயிற்சி அளித்து, மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்து வருகிறார். இந்நிலையில், அவனே செஸ் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஷாவால் பயிற்சியளிக்கப்பட்ட, 27 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 7 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், எழில்மதி, சம்யுக்தா ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், ஜெயசூர்யா, பிரனிஷ், சத்யா, நந்தனா, நந்தித்தா, பிரனிதா ஆகியோர் என, 9 மாணவர்கள் வெற்றி பெற்று, பரிசை தட்டி சென்றனர்.

