/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளைகளை அடக்க 500 'காளைகள்' தயார்
/
காளைகளை அடக்க 500 'காளைகள்' தயார்
ADDED : ஏப் 24, 2025 11:22 PM

போத்தனுார்,; கோவையில், வரும் 27ல் எல் அண்டு டி பை-பாஸ் சாலையில், கஞ்சிக்கோனாம்பாளையம் பிரிவை அடுத்து சிறிது தொலைவில் ஜல்லிக்கட்டு போட்டி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது.
இதற்கான வாடிவாசல், காலரி அமைத்தல் உள்ளிட்ட பணி நடந்து வருகிறது. பை-பாஸ் சாலையை ஒட்டி, காளையை வீரர் அடக்கும் சிலை அமைக்கப்பட்டு, 'செல்பி பாயின்ட்' திறக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கிறார். 750 காளைகளை அடக்க, 500 வீரர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர். 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது.
அதிக காளைகளை அடக்கும், முதல் மூன்று வீரர்களுக்கு முறையே கார், பைக், ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ரூ.5,000 மதிப்பிலான சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.

