sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

535 போதை மாத்திரை பறிமுதல்; நான்கு பேர் கைது

/

535 போதை மாத்திரை பறிமுதல்; நான்கு பேர் கைது

535 போதை மாத்திரை பறிமுதல்; நான்கு பேர் கைது

535 போதை மாத்திரை பறிமுதல்; நான்கு பேர் கைது


ADDED : ஏப் 17, 2025 11:41 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பீளமேடு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 535 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுவிலக்கு அமாலக்க பிரிவு போலீசார் சின்னியம்பாளையம், பொன் மாரியம்மன் கோவில் அருகில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு நான்கு வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் போலீசார் பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் 535 மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போதை மாத்திரை வைத்திருந்த காளப்பட்டியை சேர்ந்த யஷ்வந்த், 25, ஒண்டிப்புதுாரை சேர்ந்த சந்தானராஜ், 22, பீளமேடு புதுாரை சேர்ந்த நித்தீஷ்குமார் 24, உடையாம்பாளையத்தை சேர்ந்த பிரதீப், 24 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us