/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்
/
கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்
கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 05, 2025 10:37 PM
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 26ம் தேதி, இ-மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியபோது, புரளி என்பது தெரியவந்தது.
அதன்பின் தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் அதேபோல் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவை மாநகர இணையவழி குற்றப்பிரிவு (சைபர் கிரைம்)போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அரசு விடுமுறை தினமான நேற்றுகலெக்டர் ஆபீஸ் இ-மெயிலுக்கு, அதிகாலை 5.26 மணிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
விடுமுறை என்பதால் தாமதமாக, மதியத்துக்கு பின் இ-மெயிலை சரிபார்த்தபோது குண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. மோப்ப நாய் மலர் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் சோதனையிட்டனர்.
வெடிகுண்டு இல்லை. தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.