/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர்ப்பு முகாமில் 64 மனுக்களுக்கு தீர்வு
/
குறைதீர்ப்பு முகாமில் 64 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஆக 21, 2025 08:39 PM

கோவை; கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், குற்ற விவாதிப்பு கூட்டம் நேற்று நடந்தது. கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர்களை, எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார்.
அதில், 9 இன்ஸ்பெக்டர்கள், -15 எஸ்.ஐ.,க்கள், 8 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 15 தலைமை காவலர்கள்-, 5 முதல் நிலைக் காவலர்கள், 28 போலீசார் என, -80 பேரை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். 'போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எஸ்.பி., அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை குறித்த, 70 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒரு மனு மீது, எப்.ஐ.ஆர். மற்றும் மூன்று மனுக்கள் மீது சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டது.
64 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 3 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்து தீர்வு காணப்பட்டது.