தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/751 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: தீபாவளி பண்டிகைக்கு ஏற்பாடு

751 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: தீபாவளி பண்டிகைக்கு ஏற்பாடு

751 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: தீபாவளி பண்டிகைக்கு ஏற்பாடு


UPDATED : நவ 05, 2026 11:55 PM

ADDED : நவ 04, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:55 PM ADDED : நவ 04, 2026 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து இன்று (5ம் தேதி) மற்றும் 6, 7ம் தேதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு, 751 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 295, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 200, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 256 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

போதிய ரேக் வசதி இருப்பதால், திருச்சி வழியாக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட உள்ளன.

தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் பயணிகள் செல்வார்கள் என்பதால், கோவில்வழி பஸ் ஸ்டாண்டின் மேற்கு பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து பிரிக்கும் இடத்தில் 40 பஸ்களை நிறுத்தும் வகையில் இடத்தைத் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது.

புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு வசதியாக மரத்தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து திருப்பூர் திரும்புவோரின் வசதிக்காக, நேற்று (4ம் தேதி) முதல் 6ம் தேதி வரை தினமும், 10 பஸ்கள் கிளாம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

12 குழுக்கள் 121 அதிகாரிகள்



குறிப்பிட்ட வழித்தடங்களில் தனியார் பஸ்களை இயக்கவும் போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. பொது மேலாளர், வணிகம் மற்றும் தொழில்நுட்ப மேலாளர்கள், எட்டு கிளை மேலாளர்கள் உள்ளிட்ட 121 அதிகாரிகள், அலுவலர்கள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதைக் கண்காணிக்கவும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு மையம் தயார்



திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், நீண்ட துார பஸ்களுக்கான முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. 200 முதல் 250 கி.மீ., வரை பயணிக்கும் சிறப்பு பஸ்களுக்கு இங்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை மையம் செயல்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us