ADDED : நவ 04, 2026 08:27 PM

அ நிறம் | அளவு
வடவள்ளி: தமிழ்நாடு அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா பல்கலை மண்டல வளாகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கத்தின் கோவை மண்டல தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், பணி நிரந்தர செயல்முறையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு தொழில் முன்னேற்ற திட்டம் பதவி உயர்வுடன் ஊதிய நிர்ணயம் வழங்க வேண்டும், ஆறாவது ஊதியக்குழு விதிகளின்படி கூட்டு வட்டியில்லா முன்கூட்டிய ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும், டீன், துறை தலைவர்கள், முக்கிய குழு மற்றும் பல்கலை நிர்வாக பொறுப்புகளில் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
