ADDED : நவ 04, 2026 08:27 PM

அ நிறம் | அளவு
கோவை: ரெட்பீல்ட்ஸ் விமானப்படை குழுவினர், வேளாண் பல்கலையில் பயிற்சி பெற்றனர்.
இக்குழுவினருக்கு, ‘ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன் இன் அக்ரிகல்ச்சர்’ என்ற பெயரில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.
விமானப்படையில் காலநிலை குறித்து அறிந்துகொள்ளும் தொழில்நுட்பங்களுடன், வேளாண் பல்கலையின் புதிய தொழில்நுட்பங்கள் ஒப்பிடப்பட்டு அதன் மேம்பாடு குறித்து ஆலோசனை செய்தனர்.
வேளாண் பல்கலை பதிவாளர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘ விமானப்படையினருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தேனீ வளர்ப்பு, களை மேலாண்மை, பறவைகள் மேலாண்மை என பல்வேறு பயிற்சிகள் அளித்துள்ளோம். தற்போது, ரிமோட் சென்சார், காலநிலை துறையில் பயிற்சி பெற வந்துள்ளனர்,’’ என்றார்.
