/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மறைந்த முன்னாள் முதல்வர் 7ம் ஆண்டு நினைவு நாள்
/
மறைந்த முன்னாள் முதல்வர் 7ம் ஆண்டு நினைவு நாள்
ADDED : ஆக 07, 2025 11:01 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நகர வடக்கு தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், கருணாநிதியின் உருவபடத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். நகராட்சி தலைவர் சியாமளா, துணைத்தலைவர் கவுதமன், துணை செயலாளர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கைகாட்டியில் தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் சையதுஅபுதாஹிர் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.