ADDED : ஜன 14, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 86 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்திப்பாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருச்சியை சேர்ந்த சண்முகசுந்தரம்,48, கைது செய்து, அவரிடம் இருந்து, 86 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.