/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் 9,738 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை
/
அரசு மருத்துவமனையில் 9,738 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை
அரசு மருத்துவமனையில் 9,738 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை
அரசு மருத்துவமனையில் 9,738 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை
ADDED : ஆக 20, 2025 12:52 AM
கோவை; கோவை அரசு மருத்துவமனையில், ஜன., முதல் ஜூலை வரை, 9,738 பேருக்கு நாய்க்கடிக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேர், 'ரேபிஸ்' நோய் தாக்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய தினம், நாய்க்கடி விவகாரம் நாடு தழுவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து நாய்களையும் பிடித்து, காப்பகத்தில் அடைப்பது இயலாத காரியம்.
ஏனெனில், கோவை நகரில் மட்டும், 1.11 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி நியமித்துள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. இருப்பினும், அதன் பெருக்கத்தை இன்னும் குறைக்க முடியவில்லை. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில், ஏழு மாதங்களில் வெளிநோயாளிகளாக 8,902 பேரும், உள்நோயாளிகளாக 836 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். 9 பேர் ரேபீஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

