/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரை ஏற்றி நாய்களை கொன்றவர் மீது வழக்கு
/
காரை ஏற்றி நாய்களை கொன்றவர் மீது வழக்கு
ADDED : நவ 11, 2024 05:19 AM
கோவை : காரை ஏற்றி நாய்களை கொன்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை சாய்பாபா காலனி ஜவகர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஆனந்தி சங்கர், 55. இவர் அங்குள்ள இரு தெரு நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்தார். இந்நிலையில், அந்த இரு தெரு நாய்களும், சில நாட்களுக்கு முன் காணாமல்போயின.
அந்த நாய்களை ஆனந்தி சங்கர் தேடி வந்தார். ஆனால், அந்த நாய்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், 50 என்பவர் காரை ஏற்றி நாய்களை கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆனந்தி சங்கர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் முகுந்தன் மீது வழக்கு பதிந்து, அவர் நாய்களை கொலை செய்தாரா அல்லது விபத்தா என, விசாரிக்கின்றனர்.