/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திபுரத்திலிருந்து உக்கடத்துக்கு இப்படியும் ஒரு பகல் கொள்ளை
/
காந்திபுரத்திலிருந்து உக்கடத்துக்கு இப்படியும் ஒரு பகல் கொள்ளை
காந்திபுரத்திலிருந்து உக்கடத்துக்கு இப்படியும் ஒரு பகல் கொள்ளை
காந்திபுரத்திலிருந்து உக்கடத்துக்கு இப்படியும் ஒரு பகல் கொள்ளை
ADDED : ஆக 14, 2025 10:22 PM

கோவை; உக்கடத்திலிருந்து காந்திபுரம் வரை செல்வதற்கும், காந்திபுரத்திலிருந்து உக்கடம் வரை செல்வதற்கும் தனியார் டவுன் பஸ்களில் இரட்டிப்புத்தொகையும் சில பஸ்களில் மும்மடங்கு தொகையும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
கோவை உக்கடத்திலிருந்து காந்திபுரம் வரை டவுன்பஸ்களில் செல்வதற்கு கட்டணம், 6 ரூபாய் மட்டுமே. இது அரசு சொகுசு அல்லது டீலக்ஸ் பஸ்களில் சென்றால் குறைந்த பட்சம், 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதை மையமாக வைத்து பஸ் பயணிகளை குழப்பும் வகையில் பெரும்பாலான தனியார் பஸ்களில் காந்திபுரத்திலிருந்து உக்கடத்திற்கு, சொகுசு மற்றும் டீலக்ஸ் பஸ்களில் வசூலிக்கப்படும், 15 ரூபாய் கட்டணத்தையே வசூலிக்கின்றனர். சில பஸ்களில் இரட்டிப்பு கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கின்றனர்.
இது பெரும்பாலான வெளியூர் பயணிகளுக்கு தெரிவதில்லை. கண்டக்டர் கேட்கும் கட்டணத்தை கொடுத்து விடுகின்றனர். உள்ளூர் பயணிகளிடம் வசூலிக்கும் போது பிரச்னை ஏற்பட்டு சப்தமிடுகின்றனர். இது குறித்து கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டர் ஆர்.டி.ஓ.,க்களுக்கு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு பதிலளித்த விவசாயிகள் நாங்கள் புகார் தெரிவிக்கும் போதெல்லாம் இப்படியே தான் பதில் சொல்கிறீர்கள் ஆனால் மோட்டார் வாகன ஆய்வாளர்களோ, வட்டார போக்குவரத்து அலுவலர்களோ ஆய்வு செய்து பெயரளவுக்கு அபராதம் மட்டுமே விதிக்கின்றனர். தனியார் பஸ்களை சிறைபிடித்து பெரும் தொகையை அபராதம் விதித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர்.
ஆனாலும் இப்பிரச்னை இன்றும் தொடர்ந்து வருகிறது. அதிக கட்டணம் கொடுத்து பயணிகள் தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர்.அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களை சிறை பிடித்து அபராதம் விதித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் கூறினர்.