ADDED : மே 23, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடையின் தாக்கம் அதிகரித்தபோது, மரங்கள், செடிகள் காய்ந்து வறட்சியாக காட்சியளித்தன. ஆறுகள், அருவிகள் நீர்வரத்து முற்றிலும் இல்லாததால், தடுப்பணை, கசிவு நீர் குட்டைகள் உள்ளிட்ட நீராதாரமிக்க பகுதிகள் வறண்டன.
தற்போது, பருவமழை பெய்வதால், ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வனத்தில் மரங்கள் மற்றும் செடிகள், செழுமையடைந்து பசுமையாக காட்சியளிக்கிறது.