ADDED : ஆக 12, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்,; கோவை, சுந்தராபுரம் அடுத்து ஈச்சனாரி அருகே தனியார் ஐ.டி., பார்க் வளாகம் உள்ளது.
நேற்று முன் தினம் மாலை இப்பகுதிக்கு செல்லும் சாலையில் பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று நடமாடுவதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. எஸ்.ஐ.,கள் முத்துக்குமார், பரமசிவம் போலீசாருடன் அங்கு சென்றனர். ஒரு பைக் மட்டும் கேட்பாரற்று நின்றிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கண்ணையன் மேற்பார்வையில், அதிரடி படையினர் அவ்வழியே சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்தனர். இரண்டு மணி நேரம் இச்சோதனை நீடித்தது.