/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊழியருக்கு கத்திக்குத்து இளைஞருக்கு 'வலை'
/
ஊழியருக்கு கத்திக்குத்து இளைஞருக்கு 'வலை'
ADDED : டிச 11, 2025 06:43 AM
கோவை: வேலாண்டிபாளையம் ராதாகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் நாகராஜ், 50. அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். உடன் வேலை பார்த்து வந்த பெண் ஒருவருடன் இரு ஆண்டுகளாக பழகி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு மாதங்களாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை.
நாகராஜ் நேற்று முன்தினம் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த பெண்ணின் மகன் விஷ்ணு, 23 தகராறு செய்தார். மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகராஜை குத்தினார். அலறல் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு வந்தனர். அந்த வாலிபர் தப்பினார். நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய விஷ்ணுவை தேடி வருகின்றனர்.

