ADDED : ஆக 18, 2025 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட் வெளிப்புறத்தில் ஆவின் கடை அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் பெரிய மரம் இருந்தது. இந்த மரம் கடந்த இரு தினங்களுக்கு முன் முறிந்து மார்க்கெட் வளாகத்தில் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இப்பகுதியில் யாரும் இல்லை.
மேலும், மார்க்கெட்டின் நுழைவுவாயிலில் இருந்த கூடாரம் மட்டும் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை மரத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.