ADDED : ஜூன் 30, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஆர்.எஸ்.புரம், பி.எம்.சாமி காலனி ராபர்ட்சன் ரோட்டில், உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 65. மர பாலிஷ் போடும் பணி செய்து வந்தார்.
கடந்த, 27ம் தேதிக்கு பின், அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நேற்று அவர் தங்கியிருந்த மாடி வீட்டு அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அருகில் குடியிருக்கும் பூங்கொடி என்பவர், ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தார்.
போலீசார் அங்கு சென்று பார்த்த போது, முத்து கிருஷ்ணன் சடலமாக கிடந்தார். அவர் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.
தனியாக இருந்த முத்துகிருஷ்ணன், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.