/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி பேராசிரியர்களுக்கு புத்துணர்ச்சி தரும் போட்டி
/
கல்லுாரி பேராசிரியர்களுக்கு புத்துணர்ச்சி தரும் போட்டி
கல்லுாரி பேராசிரியர்களுக்கு புத்துணர்ச்சி தரும் போட்டி
கல்லுாரி பேராசிரியர்களுக்கு புத்துணர்ச்சி தரும் போட்டி
ADDED : டிச 18, 2024 09:01 PM

கோவை; இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில் நடப்பு, 2024-25ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இரு நாட்கள் நடந்தது.
இதில், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கேரம், செஸ், த்ரோபால், டேபிள் டென்னிஸ், லக்கி கார்னர், கயிறு இழுக்கும் போட்டி, இறகுப்பந்து, கிரிக்கெட், வேக நடை, குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் இடம்பெற்றன.
பணிச்சுமைக்கு மத்தியில் அவர்களது மன அழுத்தத்தை போக்கி, உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.