/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.14.54 கோடியில் குடியிருப்பு செல்வபுரத்தில் உருவாகிறது
/
ரூ.14.54 கோடியில் குடியிருப்பு செல்வபுரத்தில் உருவாகிறது
ரூ.14.54 கோடியில் குடியிருப்பு செல்வபுரத்தில் உருவாகிறது
ரூ.14.54 கோடியில் குடியிருப்பு செல்வபுரத்தில் உருவாகிறது
ADDED : மே 13, 2025 11:56 PM
கோவை; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை மாவட்டத்தில், தெற்கு பேரூர் - பேஸ் 2, எழில் நகர், சுந்தரம் வீதி, வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இதில், செல்வபுரம் தெற்கு பேரூர் பேஸ்-2 திட்டத்தில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் ரூ.14.54 கோடியில், 144 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஒரு குடியிருப்புக்கான பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.1.40 லட்சம்; ஏற்கனவே வசித்த பயனாளி பங்களிப்பு தொகை, 41 ஆயிரத்து, 260 ரூபாய். இப்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகள் மறுகட்டமைப்பு செய்வதற்கு முன், இதே பகுதியில் வசித்த பயனாளிகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் ஒதுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணியை, கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். குடியிருப்புக்குள் சென்று, ஒவ்வொரு அறையாக பார்வையிட்ட அவர், தரமாகவும், விரைவாகவும் செய்ய அறிவுறுத்தினார். திட்ட செயலாக்கம் தொடர்பாக, நிர்வாக பொறியாளர் ஜீவானந்தம், உதவி நிர்வாக பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சண்முகப்பிரியா ஆகியோர் விளக்கினர்.