/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபார்ட்மென்ட்களில் கோலாகலம்! எண்ணங்களை அழகான வண்ணங்களாக மாற்றிய நம் வாசகியர்
/
அபார்ட்மென்ட்களில் கோலாகலம்! எண்ணங்களை அழகான வண்ணங்களாக மாற்றிய நம் வாசகியர்
அபார்ட்மென்ட்களில் கோலாகலம்! எண்ணங்களை அழகான வண்ணங்களாக மாற்றிய நம் வாசகியர்
அபார்ட்மென்ட்களில் கோலாகலம்! எண்ணங்களை அழகான வண்ணங்களாக மாற்றிய நம் வாசகியர்
ADDED : ஜன 06, 2025 01:54 AM

கோவையில் 'தினமலர்' மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியர், இந்த கோலப் போட்டியில் புள்ளிக்கோலம், பூக்கோலம், ரங்கோலி என, விதவிதமான கோலங்கள் போட்டு, பரிசுகளை வென்று வருகின்றனர்.
மார்ட்டின் டெய்சி அபார்ட்மென்ட்
நஞ்சுண்டாபுரம் ரோடு ராமநாதபுரம் பகுதியில் உள்ள,மார்ட்டின் டெய்சி அபார்ட்மென்டில், நேற்று நடந்த கோலப்போட்டியில், 24 பெண்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் ரங்கோலி கோலங்களே, அதிகம் இடம் பெற்றிருந்தன.
வண்ணத்தோகை விரித்தாடும் வண்ணமயில் கோலம், காண்போர் எண்ணங்களை கொள்ளை கொண்டன. இசைக்கருவிகளை வீணை, நாதஸ்வரம், தபேலா போன்ற இசைக்கருவிகளை இணைத்து போடப்பட்ட புள்ளிக்கோலம், கலை நயத்துடன் இருந்தது. அகல் விளக்கு ஏந்திய அன்னை, பொங்கல் பண்டிகையை வரவேற்கும் புத்தாண்டு கோலம் என, கோல விழா கோலாகலமாக இருந்தது.
புள்ளிக்கோலத்தில் லதா, சங்கீதா, சபிதா, சுகுந்தா, ஹரிதர்ஷினி, பொன்னம்மாள் ஆகியோர் பரிசுகளை வென்றனர். ரங்கோலியில் தேஜஸ், மைதிலி, சுபாஷினி காயத்ரி, சுபஸ்ரீ, செல்வி ஆகியோர் பரிசு வென்றனர்.
புள்ளிக் கோலத்தில் பரிசு பெற்ற லதா, சங்கீதா கூறுகையில், 'கோலத்துக்கு அடிப்படை புள்ளிக்கோலம் தான். எங்களுக்கு ரங்கோலி தெரிந்தாலும், புள்ளிக்கோலம் போடத்தான் பிடிக்கும். பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி' என்றனர்.
ரங்கோலியில் மயில் கோலமிட்டு அசத்தி இருந்த மைதிலி, தேஜஸ் கூறுகையில், 'மயில் 'கலர்புல் பறவை. ரங்கோலி கோலத்துக்கு பொருத்தமாக இருக்கும். அதனால் மயிலை தேர்வு செய்து ரங்கோலி போட்டோம்' என்றனர்.
ஸ்ரீதக்சா கிரிவா அபார்ட்மென்ட்
கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள, ஸ்ரீதக்சா கிரிவா அபார்ட்மென்ட்டில் நடந்த கோலப்போட்டியில், 46 பேர் பங்கேற்றனர். புள்ளிக்கோலத்தில் ஆறு பேரும், ஆர்ட் ரங்கோலியில் 10 பேரும், ரங்கோலியில் 30 பேரும் பங்கேற்று, அபார்ட்மென்ட் வளாகத்தை வண்ணக் கோலங்களால் அழகுபடுத்தி இருந்தனர்.
எல்லா கோலங்களும் சிறப்பாக இருந்ததால், எதை தேர்வு செய்வது என, நடுவர்களிடம் குழப்பம் இருந்தது.புள்ளிக்கோலத்தில் விஜயலட்சுமி, மோகன பாரதி, மதுலட்சுமி ஆகியோர் பரிசு பெற்றனர்.
ஆர்ட் ரங்கோலியில், பால கீர்த்தனா, வர்ஷாஸ்ரீ, தீபா, ஆகியோர் பரிசு பெற்றனர். ரங்கோலியில், சுமதி, மகாலட்சுமி, நிவேதா ஆகியோர் பரிசு பெற்றனர். ராஜாமணி, கவிதா அனு, ராகவி ஆகியோரும் பரிசு பெற்றனர்.
இந்த மார்கழி விழாக்கோலத்தில், இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர், இணைந்து வழங்கினர்.
ஜெம் நிர்மால்யா அபார்ட்மென்ட்
மார்கழி மாத வசந்தத்தை வண்ணக்கோலங்கள் வரைந்து வரவேற்று இருந்தனர், கோவை ஜெம் நிர்மால்யா அபார்ட்மென்ட் வாசகியர்.
இங்கு நடந்த கோலப்போட்டியில் 10 பேர் பங்கேற்றனர். புள்ளிக்கோலத்தில் இரண்டு பேரும் ரங்கோலியில் எட்டு பேரும், வண்ணக்கோலங்களை வரைந்து இருந்தனர்.
டாக்டர் அபிராமி, விவசாயிகள் படும் துயரங்களை ரங்கோலியில் சித்தரித்து இருந்தார். ரங்கோலியில் விநாயகர் மற்றும் சிவன் உருவங்களை, மிக அற்புதமாக சித்தரித்து இருந்தனர். 3டி கோலம், பொங்கல் கோலங்களும் சிறப்பாக இருந்தன.
புள்ளி கோலத்தில் அமுதா, சரண்யா, ஹேமா ஆகியோர் பரிசு பெற்றனர். ரங்கோலியில், முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி, டாக்டர் அபிராமி மற்றும் வர்சிகா ஆகியோர் பரிசு வென்றனர்.
சரஸ்வதி, டெலிசியாதேவி, அறிவு, நிர்மால்யா ஆகியோர் பரிசு பெற்றனர்.
இந்த மார்கழி விழாக்கோல போட்டிகளை, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.