/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு ருத்ராட்சை மாலையின் விலை 35 லட்சம் ரூபாய்!
/
ஒரு ருத்ராட்சை மாலையின் விலை 35 லட்சம் ரூபாய்!
UPDATED : மார் 17, 2024 03:25 AM
ADDED : மார் 17, 2024 12:23 AM

ருத்ராக் ஷத்தை அணிபவர்களுக்கு நல்ல உடல்நலம், வாழ்க்கையிலும் கல்வியிலும் உயர்ந்தநிலை, வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது இறைநம்பிக்கை.
கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஓட்டலில் உள்ள, கங்கா ஹாலில் 'ருத்ரஜோதி' ருத்ராக் ஷத்தின் உண்மை முகம் என்ற, ருத்ராக் ஷ கண்காட்சி நடந்து வருகிறது.
இதில் 1 முதல் 21 முகங்களை கொண்ட ருத்ராட்சங்கள் மற்றும் ருத்ராக் ஷ மாலைகள், ஸ்படிக மாலைகள், சாளக்கிராம கற்கள், இந்திரமாலைகள், பாதரசத்தில் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பலரும் தங்களது பெயர் நட்சத்திரம், ராசி, பிறந்தநாள் ஆகியவற்றை குறிப்பிட்டு, ருத்ராக் ஷங்களை வாங்கி செல்கின்றனர். கண்காட்சி அன்றாடம் காலை 11:00 மணிக்கு துவங்கி, இரவு 8:00 மணி வரை நடைபெறுகிறது. நாளை கண்காட்சி நிறைவு பெறுகிறது.
கண்காட்சி உரிமையாளர் மும்பையை சேர்ந்த அரவிந்த் கூறுகையில், ''4,5,6 முகங்களை கொண்ட ருத்ராக் ஷங்கள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையும், 21 முகங்கள் கொண்ட ருக்ராக் ஷம் 35 லட்சம் வரையும் விற்பனையாகிறது,'' என்றார்.

