/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பலி
/
சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பலி
சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பலி
சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பலி
ADDED : நவ 01, 2024 10:26 PM
கோவை ; வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு, 39; ஆட்டோ டிரைவர். புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் இரண்டாம் தளத்தில் தனது மனைவிவெண்ணிலா, 35, மகன்கள் கவுதம், 13, சுதேஷ், 8 ஆகியோருடன் வசித்து வருகிறார்.
முதல் மகன் கவுதம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி, வடிவேலு வழக்கம் போல் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். அன்று, பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை என்பதால் அவரின் மகன்கள் இருவரும் மதியம் வீட்டிற்கு வந்தனர். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.
பின்னர், மாலை கவுதம், அவரின் தம்பி சுதேஷ் மற்றும் தாயார் மூவரும் தரைத்தளத்தில் உள்ள உறவினர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கவுதம் தான் வீட்டிற்கு சென்று டிவி பார்க்க போவதாக கூறி மேலேசென்றார்.
வீட்டிற்கு சென்ற கவுதம் கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை பிடித்து சுற்றி விளையாடினார். இதில், அவரின் தாயாரின் சுடிதார் பேண்ட் கழுத்தில் சுற்றி இறுக்கியதில்அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
சிறிது நேரத்தில் பிறகு கவுதமின் தாய் மேலே சென்றார். அப்போது, கவுதம் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, கணவர் வடிவேலை போனில் அழைத்து சம்பவத்தை தெரிவித்தார்.பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைத்து கவுதமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள்உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வடிவேலு பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.