/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொல்லியல் முக்கியத்துவம் உணர்வது அவசியம்
/
தொல்லியல் முக்கியத்துவம் உணர்வது அவசியம்
ADDED : அக் 04, 2024 11:35 PM
தொல்லியல் துறையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்-பட்டு வருகிறது. தொல்பொருள் ஆய்வுகளில் மாணவர்களுக்கு அதிக ஈடுபாட்டை உண்டாக்க ஒரே வழி, ஆய்வு நடத்தப்பட்ட இடங்களை அகழ்வாராய்ச்சி செய்வதாகும். இம்முறையில், மாணவர்கள் தொல்லியல் தளத்தின் முழுமையான கலாச்சாரம், மண்ணடுக்கு வரிசைகளைப் புரிந்துகொள்ள முடியும்.
தொல்லியல் ஆய்வுகள், ஆராய்ச்சிகளின் சமீபத்திய போக்குகளுக்கு தேவையான, பொருத்தமான புத்தகங்க-ளைப் படிப்பதில், மாணவர்களைத் துாண்டுவதோடு, தங்களைத் தாங்களே தயார் படுத்திக்கொள்வதும் ஆசிரியர்க-ளின் தலையாய கடமை. மாணவர்கள் கோட்பாடுகளைக் கேள்வி கேட்பதும், ஆராய்ச்சி பணிகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள், அவற்றை மறுவிளக்கம் செய்து தொல்பொருள் ஆய்வுத்தளத்தில் தரமான ஆராய்ச்சி வெளியீடுகளைக் கொண்டு வருவதும் அத்தியாவசிய தேவை.
தொல்லியல் அடிப்படைகளை ஆராய்ந்து, அறியச் செய்யும் செயல்முறையின் வாயிலாகவே, எட்டாதவர்களை-யும் தொல்லியல் ஆய்வுகள் சென்றடையும்.