/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு செட் இட்லி ரூ.45, பொங்கல் ரூ.60! இது, தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல்!
/
ஒரு செட் இட்லி ரூ.45, பொங்கல் ரூ.60! இது, தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல்!
ஒரு செட் இட்லி ரூ.45, பொங்கல் ரூ.60! இது, தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல்!
ஒரு செட் இட்லி ரூ.45, பொங்கல் ரூ.60! இது, தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல்!
ADDED : மார் 20, 2024 12:54 AM

கோவை;லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோர், அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் செலவிட வேண்டுமென, தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதோடு, கட்சியினர் செலவழிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயித்து, பட்டியல் வெளியிட்டு இருப்பது, கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்.
அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து வந்து, பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்தி, தங்களது கட்சிக்கு உள்ள செல்வாக்கை காட்டுவர்.
சமீபகாலமாக, தேர்தலில் போட்டியிடுவோர் கோடிக்கணக்கில் பணத்தை தண்ணீராக செலவழிப்பதால், இதை கட்டுப்படுத்த, தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவழிக்க வேண்டுமென கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
இதற்கான செலவின பட்டியலை, தேர்தல் நடவடிக்கை முடிவதற்குள் மூன்று முறை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் செய்யும் செலவுகளை, ஆணையத்தால் நியமிக்கப்படும் செலவின பார்வையாளர்கள் கண்காணித்து, வீடியோவாக பதிவு செய்வர்.
அதனால், நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே செலவழிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பொருளுக்கும் என்ன விலை என, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள பட்டியலை பார்த்து, அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இதன் படி கணக்கிட்டால், ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவிடுவது, பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வரும்.

