/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு' ரயில்வே ஸ்டேஷனில் துவக்கம்
/
'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு' ரயில்வே ஸ்டேஷனில் துவக்கம்
'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு' ரயில்வே ஸ்டேஷனில் துவக்கம்
'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு' ரயில்வே ஸ்டேஷனில் துவக்கம்
ADDED : மார் 13, 2024 01:01 AM

கோவை;கோவை ரயில்வே ஸ்டேஷனில், 'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு' விற்பனை கடை திட்டத்தை (ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட் ஸ்டால்), பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக, துவக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும், ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான, பல்வேறு ரயில்வே திட்டங்களை, நேற்று துவங்கி வைத்தார். அதில் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட, 34 ரயில்வே ஸ்டேஷன்களில், 'ஒன் ஸ்டேஷன்; ஒன் புராடக்ட்' என்ற திட்டத்தில், ஸ்டால்கள் திறக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் கோவை, கோவை வடக்கு, காரமடை, மேட்டுப்பாளையம், போத்தனுார், பீளமேடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில், 'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு கடைகள்' திறக்கப்பட்டன.
கோவை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று நடந்த இதற்கான துவக்க விழா நிகழ்ச்சியில், ஸ்டேஷன் இயக்குனர் பங்கஜ் குமார், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், பிரதிநிதிகள், ரயில் பயனாளர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.