/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு சிலை வைக்கணும்! சப்-கலெக்டரிடம் வலியுறுத்தல்
/
முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு சிலை வைக்கணும்! சப்-கலெக்டரிடம் வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு சிலை வைக்கணும்! சப்-கலெக்டரிடம் வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு சிலை வைக்கணும்! சப்-கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2025 09:20 PM

பொள்ளாச்சி; பி.ஏ.பி., திட்டம் துவங்கிய காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கக்கனுக்கு சிலை அமைக்க வேண்டும், என, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில துணை பொதுச் செயலாளர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், திட்டம் கொண்டு வர காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முன்னாள் விவசாய துறை அமைச்சர் சுப்ரமணியன், திட்டத்தை முன்மொழிந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, மகாலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைக்கப்பட்டது.
திட்டம் செயல்படுத்தும் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கக்கன், இரட்டை வாக்குரிமையில் வென்ற எம்.எல்.ஏ., திருமூர்த்தி ஆகியோருக்கு சிலை வைக்கவில்லை.எனவே, சமூக நீதி அரசு என போற்றப்படும் தமிழக அரசு, இவர்களுக்கும் சிலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த கம்பம் த.வெ.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி நகராட்சி பெரியார் காலனி கிழக்கு மேற்கு பகுதியில் சாக்கடை முறையாக துார்வாரி, புதரை அகற்ற வேண்டும். நடராஜர் காலனியில் குடிநீர் முறையாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்கள் சீரமைக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை தேவை சூளேஸ்வரன்பட்டி ஹிந்து முன்னணி அமைப்பினர், தென்றல் நகர் காளியம்மன் லே-அவுட் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
சூளேஸ்வரன்பட்டி வஞ்சியாபுரம் பிரிவு அருகே, சட்ட விரோதமாக புதியதாக ஜெப கூடம் செயல்படுகிறது. ஒலி, ஒளி அமைத்து கூட்டு பிரார்த்தனை என்ற பெயரில், நோய்களை குணமாக்குகிறோம், மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை என்றும், ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசுகின்றனர்.
குடியிருப்புக்காக வாங்கப்பட்ட இடத்தில், எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக ஜெப கூடம் நடைபெறுகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.