UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 08:58 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக குந்தாவில், 6.5 செ.மீ., கின்னக்கொரையில், 6.3 செ.மீ., எடப்பள்ளியில், 4.0 செ.மீ., கீழ் கோத்தகிரி, 3.9 செ.மீ., பர்லியாரில் 5.9 செ.மீ., மழையளவு பதிவானது.
இந்நிலையில், குன்னுார் காந்திபுரம் -காட்டேரி இடையே நள்ளிரவில் பிரபு என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்ததில் குடும்பத்தினர், 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னுார் தீயணைப்பு துறை யினர்; ஊர் மக்கள், 5 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றினர்.
