/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்கிங் சென்றவர் யானை தாக்கி பலி; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
/
வாக்கிங் சென்றவர் யானை தாக்கி பலி; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
வாக்கிங் சென்றவர் யானை தாக்கி பலி; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
வாக்கிங் சென்றவர் யானை தாக்கி பலி; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 24, 2025 12:18 AM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வாக்கிங் சென்றவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துடியலூர் அருகே உள்ள தாளியூரில் வசித்தவர் நடராஜ், 69; மளிகை வியாபாரி. நேற்று காலை, 5:30 மணிக்கு தாளியூரில் வாக்கிங் சென்றார். அப்போது புதரில் இருந்து வந்த காட்டு யானை நடராஜை தாக்கியதில், அதே இடத்தில் நடராஜ் உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து, வியாபாரி நடராஜ் சடலத்துடன் மறியல் போராட்டம் நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் விவசாய சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி உடன் பேச்சு நடத்தினர்.
பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானையை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான வனத்துறையின் கடிதம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை அனுப்பினார். இதையடுத்து மறியல் போராட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் துடியலூர், சின்னதடாகம் ரோட்டில் நேற்று காலை, 8:00 மணியிலிருந்து மதியம், 12:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.

