/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் பலி
/
120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெண் பலி
ADDED : ஜன 19, 2024 11:23 PM
அன்னுார்:குப்பேபாளையம் அருகே, போடி திம்மம் பாளையத்தை சேர்ந்தவர் ஓதிச்சாமி. இவரது மகள் ஹர்ஷினி, 29. இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இரவு 7:00 மணிக்கு மீண்டும் வீட்டு மாட்டு கொட்டகைக்கு மாடுகளை அழைத்துச் செல்லும்போது ஒரு மாடு மிரண்டுள்ளது.
இதனால் நிலை தடுமாறிய ஹர்ஷினி அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்து அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில், எட்டு தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 12:00 மணி வரை அவரை மீட்க முயற்சித்தனர்.
எனினும் மீட்க முடியவில்லை. நேற்று மீண்டும் ஐந்து மணி நேரம் போராடி 80 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பிய அந்த கிணற்றிலிருந்து ஹர்ஷினியின் உடலை மீட்டனர்.