/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை நீரை அகற்ற முயன்ற தொழிலாளி உயிரிழப்பு
/
மழை நீரை அகற்ற முயன்ற தொழிலாளி உயிரிழப்பு
ADDED : அக் 26, 2024 06:37 AM
கோவை: வீட்டின் முன் தேங்கியிருந்த மழைநீரை, மோட்டார் மூலம் அகற்ற முயன்றபோது, மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
கோவை, சிட்ரா அழகு நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 44. திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கணவன், மனைவி இருவரும் கட்டட வேலைக்கு சென்று வந்தனர். கடந்த, 23ம் தேதி கோவையின் பல்வேறு பகுதிகளில், மழை பெய்ததால் ரமேஷ் வீட்டின் முன் குழியில் தண்ணீர் தேங்கியிருந்தது. நேற்று முன்தினம் காலை ரமேஷ், தனது வீட்டில் இருந்த மின் மோட்டார் பயன்படுத்தி, தண்ணீரை வெளியேற்ற முயன்றார்.
அப்போது மின்சாரம் தாக்கி, ரமேஷ் கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி, ரமேஷ் உயிரிழந்தார்.