/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடாதொடா, நொச்சி இலவசம்; வேளாண்மை துறை அறிவிப்பு
/
ஆடாதொடா, நொச்சி இலவசம்; வேளாண்மை துறை அறிவிப்பு
ADDED : ஜூலை 29, 2025 08:30 PM
மேட்டுப்பாளையம்; விவசாயிகளுக்கு ஆடாதொடா, நொச்சி மற்றும் வேம்பு நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்யலட்சுமி கூறியிருப்பதாவது:-
உயிர் பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களான ஆடாதொடா, நொச்சி, வேம்பு போன்றவைகள் வேளாண்மை துறையில் இலவசமாக வழங்கப்படுகிறது.
மீண்டும் இயற்கை பூச்சி விரட்டி பயன்பாட்டினை, நடைமுறைக்கு கொண்டு வந்து, விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை குறைக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் இவை வழங்கப்படுகின்றன.
இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், பூச்சிகள் மற்றும் நோய்களை முன்கூட்டியே கட்டுப்படுத்தலாம்.
பாதிப்புகள் குறைந்து, விவசாயிகள் வருமானம் உயர வழி வகுக்கிறது. ஒரு  விவசாயிக்கு அதிகபட்சமாக 10 எண்ணிக்கையில் ஆடாதொடா, நொட்சி, வேம்பு வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தும் பெறலாம். காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகியும் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

