தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடி கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் பரவசம்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் பரவசம்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் பரவசம்


ADDED : ஆக 14, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர், ஆக. 15 -

ஆடி வெளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.

ஆடி மாத கடைசி வெள்ளிக் கிழமையை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள, பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், அப்பநாயக் கன்பட்டி சக்தி மாரியம்மன், ராமாச்சியம்பாளையம், செங்கத்துறை, பாப்பம்பட்டி மாகாளியம்மன், ரங்கநாத புரம் தங்கமுத்து மாரியம்மன், சூலூர் மேற்கு அங்காளம்மன், சூலூர் குடலுருவி மாரியம்மன், கலங்கல் மகாலட்சுமி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித் தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி கோலாகலம்

சார் படங்கள் உண்டு

அன்னூர், ஆக. 15-

அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து, ஆண்டாள் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மாங்கல்ய சரடு உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து இனிப்பு பலகாரங்களால் அலங்கார பூஜை நடந்தது.

முகாசிசெம்சம்பட்டி வீரமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பதுவம்பள்ளி வீரமாத்தி அம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி உடனமர் சன்னதி, பெரிய அம்மன் கோவில் உள்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆண்டாள் ஆடிப்பூர விழா

சார் படம் உண்டு

சக்தி விநாயகர் வீதியில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us