/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாச்சியார் அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா
/
நாச்சியார் அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா
ADDED : ஜூலை 17, 2025 10:27 PM
போத்தனூர்; கோவை தெற்கு உக்கடத்தில், பெரியகுளத்தை ஒட்டி, மதகடி கன்னிமார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
அவ்வகையில் இவ்வாண்டு இன்று துவங்கும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு வேள்வி துவங்குகிறது. தொடர்ந்து பால், தயிர், சந்தனம், விபூதி என பலவித அபிஷேக ஆராதனையும், இதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கின்றன.
அதுபோல், பொன்னேகவுண்டன்புதூரிலுள்ள நாச்சியார் அம்மன் கோவிலில், வரும் ஆக., 3 காலை, 6:00 மணி முதல் வேள்வி, அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில்களின் நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கிறது.