/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிக்கிருத்திகை; முருகன் கோவில்களில் கோலாகலம்
/
ஆடிக்கிருத்திகை; முருகன் கோவில்களில் கோலாகலம்
ADDED : ஜூலை 20, 2025 10:43 PM

அன்னுார்; ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் சன்னதியில், நேற்று காலை 10:30 மணிக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை நடந்தது.
இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதரராக அருள் பாலித்தார்.
குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 61வது ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நேற்று நடந்தது.
காலையில் நாம ஜெபமும், கலச பூஜையும், அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. காலை 11:00 மணிக்கு பக்தி நடனத்துடன் பஜனை நடந்தது.
மதியம் வள்ளி தெய்வானை சமேதரராக கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில் அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், அன்னுார், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குமாரபாளையம், பொகலூர், கணேசபுரம், பசூர், பொன்னே கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முருகப் பெருமான் சன்னதிகளில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.